×

வேலைவாய்ப்புகளை பெருக்க நிதி நிலை அறிக்கையில் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?: மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி

சென்னை: விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படாத நிலையில் வேலைவாய்ப்புகளை பெருக்க நிதி நிலை அறிக்கையில் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர் பாலு நேற்று மக்களவையில் வேலை வாய்ப்பினைப் பெருக்க நிதிநிலை அறிக்கையில் ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? என்றும் விவசாயத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட நிலையில் வேலை வாய்ப்புகள் பெருக வாய்ப்பு உள்ளதா? என்றும் மத்தியநிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர்: 2018-19ம் ஆண்டில் 61 லட்சம் பணியாளர்களுக்கு வைப்பு நிதி வழங்கப்பட்ட நிலையில் 2019-20ம் ஆண்டில் 65 லட்சம் பணியாளர்கள் வைப்பு நிதி கணக்கில் உள்ள நிலையில் வேலை வாய்ப்பு பெருக உள்ளது என்றும், திவால் மற்றும் கடனாளிகள் சட்டம், சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் போன்றவைகளினால் வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரித்துள்ள நிலையில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய அரசின் பல்வேறு துறைகளில் கட்டமைப்பு வலுப்படுத்தும் வகையில் தேசிய கட்டமைப்பு திட்டங்களுக்காக 103 லட்சம் கோடி அடுத்த 5 ஆண்டுகளில் செலவிடப்பட உள்ளது. பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம், முத்ரா திட்டம், பிரதம மந்திரியின் மாடு வளர்ப்பு திட்டம், தூய்மை இந்தியா திட்டம், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் வேலைவாய்ப்பை பெருக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் விவசாயத்துறைக்கும், ஊரக வளர்ச்சித்துறைக்கும் 2019-20 2,49,910 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இப்போது 2020-21 2,83,202 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் மக்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் விளக்கிக் கூறியுள்ளார்.

Tags : Baloo MP Question ,Baloo ,Lok Sabha ,augmentation , any plans for employment, augmentation, financial position reporting? , DR Baloo MP, Question
× RELATED 6வது கட்ட மக்களவை தேர்தல்; 58...